சில வெப்சைட்டுகளைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன். எனக்கு கணனி வேலைகளில் அலுப்பாகவோ இல்லை சும்மா இருந்தால் அதிகமாக போவது சில Forum களுக்குத்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த்தை பகிர்ந்து கொள்வார்கள். சந்தேகங்களை கேட்டுக்கொள்வார்கள். சில நாட்களிலேயே ஒரு குடும்பம் போல பழகிவிடுவார்கள். நன்றி சொல்வது வாழ்த்துச்சொல்வதென எல்லாம் இனிமையாக இருக்கும். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னர் Forum மற்றும் Blog என்பவற்றைப்பற்றி தெரியாது. பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது Forum கட்டமைப்பென தெரியாது. ஏதோ வெப்சைட் என்றுதான் பயன்படுத்தியிருக்கிறேன். பின்னர்தான் இவைபற்றி தெரிந்து கொண்டேன்.
சரி வழமையாக நான் சென்றுவரும் சில Forum களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
http://www.smarthackerz.com/forums இந்த forum ல் பல கணனி சிக்கல்களுக்கும் நெட்வேர்க் சிக்கல்களுக்கும் அத்துறை வல்லுனர்களாகவுள்ள உறுப்பினர்களிடம் கேட்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். மற்றும் வன்பொருள் சிக்கல்களுக்கும் தீர்வு தருகிறார்கள். இவையாவும் Computer Zone ல் இருக்கும். கணனி விளையாட்டுப்பிரியர்களுக்கு இணையத்தில் இணைந்து பெரிய விளையாட்டுகளை விளையாட சர்வர்களின் அனுமதியையும் ஒரிஜினல் Product Key போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். இவை Game zone ல் கிடைக்கும்.
இதேபோல் டவுண்லோட் Zone, Adult Zone மற்றும் Satellite TV க்கும் ஒரு category வைத்திருக்கிறார்கள்.
அடுத்து http://www.worldwide-forum.be/forum/index.php எனும் Forum. இந்த தளத்தில் உறுப்பினரானதும் உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை குடுத்துவைத்தால் எல்லாரும் வரவேற்பதுடன் நல்ல நட்பு வட்டம் சதுரம் போன்றவற்றையும் உருவாக்கிக்கொள்ளலாம். இந்த தளத்தில் அதிகம் பயன்படுத்துவது Download Zone தான். தேவையானவற்றை தேடி மினக்கடாமல் Request Zone ல் தேவையென குறிப்பிட்டால் உடனடி சுட்டி கிடைக்கும். அதிகபட்சமாக 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். மற்றும் வெப் செக்ஷனில் இணையத்தள வடிவமைப்பிற்கான பல உதவி scripts கிடைக்கும்.
The Media Site எனும் Forum இப்போதுதான் பயன்படுத்த துவங்கியிருக்கிறேன். பல படங்கள் இருக்கின்றன. முக்கியமாக பழைய படங்கள். அப்பாவிடம் கேட்டு அவருக்கு பிடித்த்தை தரவிறக்கம் செய்யலாம். நேற்று அங்கிருந்து வாரணம் ஆயிரம் பாடல் 1140Khz ல் Encode பண்ணி torrent தந்திருந்த்தை கண்டு தரவிறக்கினேன். ஒரேயொரு புண்ணியவான் மட்டுமே ஸீட்ஸ் தருகிறார். எப்படியும் 2 நாள் பிடிக்குமென தெரிகிறது.
http://www.scienceforums.net/forum/ எனும் தளத்தில் பல விஞ்ஞான விடயங்களை தருகிறார்கள். அத்தனை பேரும் பெரிய மண்டைக்காய்கள். பௌதிகவியல், கணிதம், இசாயனவியல், உயிரியல், மருத்துவம் மற்றும் Amateur Science போன்றவற்றை பற்றிய விளக்கங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
அசைன்மன்டு மற்றும் புரொஜக்ட் என்பவற்றிற்கு உதவிகளும் பெறலாம். ஆனால் நேரடியாக விடைகளை தாருங்கள் என கேட்டால் ஒரு பயலுகளும் உதவ மாட்டார்கள். சொந்த அனுபவம்.
http://www.sitepoint.com/forums எனும் தளமானது இணையத்தள உருவாக்க ஆரம்ப மற்றும் இடைநிலை வல்லுனர்களுக்கு ஓர் வலதுகையாக தொழிற்படுகிறது. PHP, ASP, Ajax மற்றும் XML என எதையெடுத்தாலும் உடனுக்குடன் விளக்கம் தருவார்கள். Coding சம்பந்தமாக எந்தவித சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யலாம். கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய தளம்.
http://www.phpfreaks.com எனும் தளம். பெயருக்கேற்றவாறு PHP க்கே நேந்துவிட்ட தளம். எல்லாவிதமான PHP,SQL மற்றும் சர்வர் மேலாண்மை விடயங்களுக்கும் இங்கே வல்லுனர்கள் உண்டு. வேண்டுதல்களுக்கு பார்த்திருக்க உடனடி பதில்களை தருவார்கள். டெவலப்பர்கள் கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய இன்னொரு தளம்.
http://forums.devshed.com/ எனும் நான் மிக விரும்பும் தளமானது முழுக்க முழுக்க மென்பொருள் வல்லுனர்களுக்காகவே நேந்து விட்டிருக்கிறார்கள். டெவலப்பர்கள் கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய இன்னொரு தளம். இணைய வடிவமைப்பு மற்றும் Desktop Application சம்பந்தமாக அனைத்து வகையறா சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.